ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
குழந்தை நட்சத்திரமான பிரகர்ஷிதா 90-கள் காலக்கட்டத்தில் வேலன், ராஜ ராஜேஸ்வரி போன்ற பக்தி நாடகங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற சிறுபெண்ணாக அத்திந்தோம் பாடலில் தோன்றியிருந்தார். அதன்பின் 18 ஆண்டுகளாக திரையிலேயே தோன்றாத அவர் தற்போது சின்னத்திரை சீரியலில் நடிக்க வருகிறார்.
ராதிகா சரத்குமார் நடிக்கும் 'தாயம்மா' என்ற தொடர் பொதிகை டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. அந்த தொடரில் தான் பிரகர்ஷிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரகர்ஷிதாவே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சில மீம் இமேஜ்களையும், நடிகை ராதிகாவுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பிரகர்ஷிதாவுக்கு திருமணமாகி அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், அவரது கம்பேக் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.