ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் 'லிப்ட்', 'டாடா' என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த கவின், தமிழ் சினிமாவின் பேவரைட் ஹீரோ பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர் தற்போது தனது சிறு வயது தோழியான மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் கவினின் முன்னாள் காதலியான பிக்பாஸ் லாஸ்லியாவை பலரும் கலாய்த்து வந்தனர். ஆனால், கவின் திருமணம் செய்யப்போகும் மோனிகா, லாஸ்லியாவுடனும் நல்ல நட்பில் இருந்து வருவதாக தகவல் தற்போது வெளியாகி வருகிறது. ஸ்டைலிஸ்ட்டான மோனிகா, லாஸ்லியாவுடனும் இணைந்து பணிபுரிந்துள்ளார். மோனிகாவும் லாஸ்லியாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.