அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

சின்னத்திரையின் சூப்பர் ஜோடிகளாக வலம் வரும் ஆல்யா - சஞ்சீவை ரசிகர்கள் அனைவருக்குமே பிடிக்கும். திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையிலும் இருவருக்குமிடையே இருக்கும் காதல் வளர்பிறை போல வளர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், சஞ்சீவ் மீது தனக்கு காதல் வந்தது எப்படி என்ற சுவாரசியமான கதையை ஆல்யா தற்போது கூறியுள்ளார்.
மாடலிங் செய்யும் போதே ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சீவை பார்த்த ஆல்யா அவரை சைட் அடித்திருக்கிறார். அவரிடம் பேசும் போது கூட அண்ணா என அழைத்து தான் பேசியிருக்கிறார். இப்படியாக சென்று கொண்டிருக்கும் போது தான் ராஜா ராணி தொடரில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கமிட்டாகியுள்ளார். அப்போதும் சஞ்சீவை பார்த்து அசடு வழிந்த ஆல்யா, சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட புரிதல், விட்டுக்கொடுக்கும் தன்மையால் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இப்போது திருமணமே நடந்திருந்தாலும் நாங்கள் காதலித்து கொண்டுதான் இருக்கிறோம் என்று ஆல்யா கூறியுள்ளார்.