'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
எதிர்நீச்சல் தொடரில் நடிகை தேவயானி என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் தொடரில் ஏற்கனவே பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரில் அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பம்பாய் ஞானத்துடன் நடிகை தேவயானி நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து தேவயானி எதிர்நீச்சல் தொடரில் நடிக்கிறார் என பலரும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக நடிகை ஜெயஸ்ரீயை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்டு வந்தது போல் தேவயானியும் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கலாம் அல்லது அப்பத்தா கதாபாத்திரம் தற்போது கோமா நிலைக்குச் சென்று ஹாஸ்பிட்டலில் இருப்பதால், ஒருவேளை கதையில் சில மாற்றத்தை கொண்டு வர தேவயானி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் பலவாறாக யூகித்து வருகின்றனர். எனினும், இந்த செய்தி குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.