ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருப்பதால் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் தொலைக்காட்சி சேனல்கள் குழுந்தைகளை கவரும் படங்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் கலர்ஸ் தமிழ் சேனல் இந்த வாரத்தை 'ஸ்பைடர்மேன் வாரம்' என அறிவித்து இதுவரை வெளிவந்த 5 ஸ்பைடர்மேன் படங்களையும் ஒளிபரப்புகிறது.
இன்று காலை 8.30 மணிக்கு ஸ்பைடர்மேன் படத்தின் முதல் பாகத்தை ஒளிபரப்பியது. வரும் வெள்ளிக்கிழமை 21ம் தேதி வரை தினமும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்புகிறது. அதன்படி நாளை 18ம் தேதி ஸ்பைடர்மேன் இரண்டாம் பாகத்தையும், நாளை மறுநாள் 19ம் தேதி மூன்றாம் பாகத்தையும், வியாழக்கிழமை 'அமேசிங் ஸ்பைடர் மேன்' படத்தையும், வெள்ளிக்கிழமை 'ஸ்பைடர்மேன் ஹோம் கமிங்' படத்தையும் ஒளிபரப்புகிறது.