நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து பிரபலமானவர் நீலிமா ராணி. திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக அதிக நேரம் செலவழிட்டு வருகிறார். எனவே, சமீபகாலங்களில் அதிகமாக நடிப்பதில்லை. திருமணத்திற்கு பின் தனது கணவரை எந்த அளவிற்கு நீலிமா காதலித்து வருகிறார் என அவரது சோஷியல் மீடியா பதிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நீலிமா தனது கணவரை தாத்தா என்று சிலர் கிண்டலடிப்பதாக வருத்தப்பட்டுள்ளார். 'என் கணவரின் புகைப்படத்தை பார்த்து எனக்கு அவர் அப்பாவா? தாத்தாவா? என்று கேட்கிறார்கள். என் கணவருக்கு சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி தான். மற்றவர்களுக்காக அதை மறைத்து டை அடித்துக் கொண்டு திரிய வேண்டும் என அவர் நினைப்பதில்லை. நானும் அப்படி விரும்பவில்லை. இயற்கையாக எப்படி இருக்க முடியுமோ, அப்படி இருக்கிறார்' என்று கூறி கண்கலங்கியுள்ளார்.