ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சிற்பிக்குள் முத்து' என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா. தற்போது 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முல்லையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் லாவண்யா 'ரேசர்' என்ற படத்தின் மூலம் சினிமா ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிக்கும் படம் இது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்து இருக்கிறார் சதீஷ். பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பரத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ். மேலும் ஆறுபாலா, 'திரௌபதி சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் சதீஷ் கூறியதாவது: தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனையை மையமாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக் ரேசர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் அகில் சந்தோஷ். ஆனால் அவர் கேட்கும் விலை உயர்ந்த ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கி தர முடியவில்லை. ஆனாலும் தனது லட்சியத்தில் பின்வாங்காத அகில் தானே கஷ்டப்பட்டு பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயல்கிறார். இதற்கிடையில் அவர் சந்திக்கும் போராட்டங்கள் அதை மீறி அவரால் சாதிக்க முடிந்ததா என்பதை விறுவிறுப்புடன் படம் விளக்குகிறது. இதற்கிடையில் இளவட்ட காதல் கதையும் இழையோடுகிறது.வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. என்றார்.