பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
பசங்க திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிஷோரும், சின்னத்திரை நடிகை ப்ரீத்தியும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதில், ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது பெரியவர். இவர்களது திருமணம் அண்மையில் உற்றார் உறவினர் புடைசூழ நடந்து முடிந்தது. இருப்பினும், சிலர் இருவரது வயது வித்தியாசத்தை வைத்து நெகட்டிவாக கமெண்ட் செய்து வந்தனர். இதுகுறித்து திருமணம் முடிந்த கையோடு பேட்டி கொடுத்த தம்பதிகள் 'வயது வெறும் நம்பர் தான்' என கூறியுள்ளனர்.
மேலும், கிஷோர் தனது காதல் குறித்து கூறும் போது, 'வயதை வைத்து பேசுபவர்களுக்கெல்லாம் நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு கிடைத்த பெண் போல உங்களுக்கும் கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேசமாட்டீர்கள். எங்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது. வீட்டிலும் பிரச்னை இல்லை. இப்போது திருமணத்தையும் முடித்துவிட்டோம். இதில் யாருக்கு என்ன பிரச்னை' என ஓப்பனாக பேசி விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்துள்ளார்.