ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் |
தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பி போட்டிக்காக நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் அவ்வப்போது சில தரக்குறைவான தந்திரங்களை செய்வது வழக்கம். பல நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய் டிவியும் சில சமயங்களில் இதற்காக கண்டனங்களை வாங்கியுள்ளது. அந்த வகையில் டிஜே ப்ளாக் எனும் நபரை வைத்து விஜய் டிவி நிகழ்ச்சிகள் சில மட்டமான புரொமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர்.
முன்னதாக 'ஊ சொல்றியா ஊஊ சொல்றியா' என்ற நிகழ்ச்சியில் நடிகை ரோஜா ஸ்ரீ, டிஜே ப்ளாக்கை காதலிப்பது போலவும், அதை டிஜே ப்ளாக் மறுத்துவிட ரோஜா ஸ்ரீ வருத்தத்துடன் இருப்பது போலவும் ஒரு சோகக்கதையையே சில நாட்கள் ஓட்டினார்கள். இந்த விவகாரமானது அந்நிகழ்ச்சியை தாண்டியும் மற்ற ஊடக பேட்டிகளிலும் பிரதிபலித்தது. கடைசியாக டிஜே ப்ளாக் அந்நிகழ்ச்சியிலேயே ரோஜா ஸ்ரீயை அக்கா என கூறி பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.
அந்த பரபரப்பு அடங்கி சில நாட்களே ஆனது. அதற்குள் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகி பூஜாவுக்கு டிஜே ப்ளாக் ரூட் விடுவது போலவும் அதை நிகழ்ச்சிக்கு வந்த பூஜாவின் அம்மா கண்டிப்பது போலவும் டிராமாவை நிகழ்த்தியுள்ளனர். ஆனால், அது வெறும் ப்ராங்க் தான். தற்போது இந்த சம்பவத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பாடகி பூஜா தனது இண்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டுள்ளார். டிஜே ப்ளாக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'ப்ராங்கை அனைவரும் என்ஜாய் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால் மன்னித்துவிடுங்கள்' என்று போட்டுள்ளார். இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் சிலர் 'டிஜே ப்ளாக்கை இதுக்குதான் வச்சுருக்கீங்களா! இப்படிதான் உங்க டிஆர்பிய கூட்டனுமா?' என விஜய் டிவியை கலாய்த்து வருகின்றனர்.