மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
சினிமா நடிகர் கூல் சுரேஷுக்கு புதுப்படம் ரிலீஸ் ஆகிவிட்டால் போதும், இறங்கி செய்வார் புரோமோஷனை. இதற்காகவே சில யூ-டியூப் சேனல்கள் அவர் முன் மைக்கை போட்டு கண்டெண்டுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், சாக்ஷி அகர்வால் நடிப்பில் 'நான் கடவுள் இல்லை' திரைப்படமானது நேற்றைய தினம் ரிலீஸாகியுள்ளது. இதன் ப்ரீமியர் ஷோவை நடிகை சாக்ஷி அகர்வாலுடன் இணைந்து பார்த்த கூல் சுரேஷ் பத்திரிகையாளரிடம் படம் குறித்து வழக்கம் போல் புகழ்ந்து தள்ளினார். அப்போது நடிகை சாக்ஷி அகர்வால் அருகில் நின்றதால் அவர் தோள் மீது கைப்போட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாரத வகையில் சட்டென சாக்ஷிக்கு முத்தம் கொடுத்தார். கூல் சுரேஷின் இந்த செயலை பார்த்து பலரும் அதிர்ந்து போயினர். இருப்பினும் அவர் தனது ஸ்டைலில் அதை சமாளித்துவிட்டார். முன்னதாக இதை போல் நடிகை யாஷிகாவிடமும் கூல்சுரேஷ் அட்ராசிட்டி செய்திருந்தது இணையத்தில் வைரலானது. தற்போது அதையும் தாண்டி சாக்ஷிக்கு முத்தமே கொடுத்துவிட்டதால் சாக்ஷியின் ரசிகர்கள் கூல் சுரேஷின் மீது கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.