மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
ஐடி ஊழியரான வினுஷா தேவி மாடலிங்கில் நுழைந்து பிரபலமானதை தொடர்ந்து சின்னத்திரை, சினிமா அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். அதேசமயம் மாடலிங்கையும் விடாமல் அடிக்கடி விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் விண்டேஜ் ஸ்டைல் தீமுடன் சில புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டுள்ளார். இதற்கான இன்ஸ்பரேஷன் தனது அம்மாவின் பழைய புகைப்படத்திலிருந்து வந்தது எனவும் தெரிவித்துள்ளார். பேக்ரவுண்டு, கலர் டோன் என 80-களை நினைவுப்படுத்தும் அந்த போட்டோஷூட்டின் ஒரு புகைப்படத்தில் சராசரி குடும்பத்து பெண் அந்த காலத்தில் போட்டோ எடுக்கும் போது எப்படி வெகுளியாக போஸ் கொடுப்பார் என்பதையும் தத்ரூபமாக நின்று காட்டியுள்ளார். இந்த விண்டேஜ் சீரியஸ் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
வினுஷா தற்போது விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தவிர, இவர் நடித்த என்-4 என்ற திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.