23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் 'கேளடி கண்மணி', 'மகராசி', 'கல்யாண பரிசு' ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். சிறிய இடைவேளைக்கு பின் தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். திவ்யா ஸ்ரீதருக்கும் அவரது கணவர் அர்னவுக்கும் இடையேயான பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்த நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திவ்யா ஸ்ரீதர் தற்போது கர்ப்பமாக இருந்து வரும் சூழலில் அவருக்காக 'செவ்வந்தி' சீரியல் குழுவினர் மினி வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதன் வீடியோவை சக நடிகை ஷிவான்யா சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார். முன்னதாக இதேபோல் 'மகராசி' சீரியல் குழுவினரும் திவ்யாவுக்கு வீட்டில் வைத்தே மினி வளைகாப்பை செய்திருந்தனர். காதலுக்காக பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திவ்யாவுக்கு, இன்று கணவரின் ஆதரவும் கிடைக்கவில்லை. எனினும் அவரை சக நடிகர்கள் பாசத்துடன் பார்த்துக்கொள்வதை பார்த்து ரசிகர்களும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.