ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
ஊடகங்களில் அரசியல் பிரிவு நெறியாளராக பிரபலமானவர் விக்ரமன். சமூகநீதி மற்றும் அரசியல் குறித்த ஆழ்ந்த அறிவு கொண்ட விக்ரமன் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ல் என்ட்ரி கொடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் ஒரு சில இடங்களில் அவரது நிதானமான அணுகுமுறையும், நேர்மையும் நேயர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன.
இந்நிலையில், விக்ரமன் ஆங்கரிங் செய்வதற்கும் முன்பு சீரியல்களில் நடித்துள்ள தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் தீயாக பரவி வருகின்றன. 2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'விண்ணைத்தாண்டி வருவாயா' சீரியலில் மதுமிளா, வீஜே பார்வதி, திவ்யா கணேஷ், சத்ய சாய் கிருஷ்ணா ஆகியோருடன் நடித்திருந்தார். இதில், விக்ரமனை தவிர மற்ற அனைவரும் சீரியல்களில் நடித்து பிரபலமாகிவிட்டனர். அதேபோல் மற்றொரு டிவியில் ஒளிபரப்பான 'இஎம்ஐ தவணைமுறை வாழ்க்கை' என்ற நாடகத்திலும் நடிகை பாவ்னியுடன் இணைந்து விக்ரமன் நடித்துள்ளார். விக்ரமன் நடித்த அந்த தொடர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.