'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' |
மலையாள திரைப்பட நடிகையான நித்யா தாஸ் தமிழில் ஷ்யாமுக்கு ஜோடியாக 'மனதோடு மழைக்காலம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நித்யாதாஸுக்கு தற்போது 15 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பின் திரைப்படங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு சின்னத்திரையில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார் நித்யா.
சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரது பதிவுகளுக்கு இரண்டு மாநிலங்களிலும் ஏரளாமான ரசிகர்கள் உள்ளனர் . இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நித்யாதாஸும் அவரது மகள் நயினாவும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் நயினாவுடன் நிற்கும் நித்யாதாஸை பார்த்தால் யாரும் அவரை அம்மா என்று சொல்லிவிட முடியாது. நயினாவின் பள்ளித்தோழி போல அவ்வளவு இளமையாகவும் அழகாகவும் காட்சி தருகிறார் நித்யா. ரசிகர்களின் கண்களில் பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக மகளின் பள்ளிச் சீருடையை மாட்டிக்கொண்டு நித்யா கொடுத்துள்ள போட்டோஷூட்டும் சோஷியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.