ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரையில் பாடல் போட்டி மூலம் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. அதன் பிறகு குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார். அவரது குழந்தைத்தனமான முகமும் வேடிக்கையான சேட்டைகளும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளது. இந்த பாபுலாரிட்டி அவரை சினிமாவுக்கும் அழைத்து வந்தது. டான் படத்தில் நடித்த அவர் தற்போது காசேதான் கடவுளடா, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சோலோ இசை நிகழ்ச்சி நடத்துகிறார் சிவாங்கி. நாளை (செப்டம்பர் 9) முதல் வருகிற 11ந் தேதி வரை சென்னை பீனிக்ஸ் மாலில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் சிவாங்கியின் கச்சேரி நடக்கிறது. இதில் சிவாங்கி பாடுவது மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்த உள்ளார். சிவாங்கியோடு சந்தோஷ் பாலாஜி, செபாஸ்டியன், விஜே கணேசன், லக்ஷ்மன், மேக்னஸ், அக்ராஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.