எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் |
கலர்ஸ் தமிழ் சேனலின் 'இதயத்தை திருடாதே' சீரியலின் மூலம் சின்னத்திரையில் நுழைந்த நவீன் தற்போது அதே சேனலில் 'இது கண்ட நாள் முதல்' என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகியும் ஸ்பாட்டுக்கு வராமல் இருந்த நவீனை உதவி இயக்குநர் குலசேகரன் என்பவர் அவரது அறைக்கு சென்று அழைத்துள்ளார். அப்போது கோவமடைந்த நவீன் குலசேகரனின் கண்ணத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது.
இதில் குலசேகரனுக்கு அடிப்பட்டு முகத்தில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நவீன் மீது சின்னத்திரை இயக்குநர் சங்கத்திலும், மதுரவாயல் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் உதவி இயக்குநர் குலசேகரன். பின்னர் சங்கத்தின் மூலமே பிரச்னையை தீர்த்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டு தற்போது சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கி உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் 'இதயத்தை திருடாதே' சீரியலில் நவீனுடன் சேர்ந்து நடித்திருந்த பிரபல நடிகை நிலானியும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆரம்பத்தில் நவீன் பாசமாக பழகியதாகவும் சீரியல் முடியும் தருவாயில் அவரது கேரக்டர் மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு முறை சண்டை காட்சியின் போது குத்துவிளக்கை மிகவும் ஆக்ரோஷமாக நடிக்கிறேன் என்ற பெயரில் சூடான எண்ணெய்யை என் மீதும், நடிகர் ஷாம் மீதும் ஊற்றிவிட்டார். அதற்காக மன்னிப்பு கூட கேட்கவில்லை. மற்றொரு நிகழ்வில் நவீன் என்னை பிடித்து தள்ளுவது போல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நவீன் என்னை உண்மையிலேயே தள்ளியதில் எனது முதுகு எலும்பு முறிந்துவிட்டது என்றும் புகார் கூறியுள்ளார். வைரலாக பரவி வரும் இந்த செய்திகளால் நவீனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்களுக்கிடையே சண்டை நடந்து வருகிறது.