சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் 'நினைத்தாலே இனிக்கும்' டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வருகிறது. இந்த தொடரில் தர்ஷினி என்ற கதாபாத்திரத்திற்கு இதுவரை மூன்று நடிகர்கள் மாறிவிட்டனர். சீரியலின் தொடக்கத்தில் தர்ஷினி கதாபாத்திரத்தில் முதலில் தீப்தி ராஜேந்திரன் என்ற நடிகை நடித்து வந்தார். ஆனால், அவர் திடீரென விலகிவிட்ட நிலையில் ஸ்ரீநிதி நடிக்க ஆரம்பித்தார். ஸ்ரீநிதி நடிக்க ஆரம்பித்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் தற்போது அவரும் மாற்றப்பட்டு புதிதாக தாட்சாயினி என்ற நடிகையை நடிக்க வைத்துள்ளனர். இவர் ஜீ தமிழில் ஏற்கனவே ஒளிபரப்பான 'என்றென்றும் புன்னகை', 'சூர்யவம்சம்' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.