'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ஜீ தமிழ் டிவி கோடை கொண்டாட்டமாக 7 ஞாயிற்றுக்கிழமைகளில் 7 எபிக் திரைப்படங்களை நேயர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் நேயர்களைப் பரவசப்படுத்தும் வித்தியாசமான பொழுதுபோக்கு படங்களை ஒளிபரப்பு செய்தது. இந்த வாரம் "தி ப்ரிஸ்ட்" படத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை மே 2022 அன்று மாலை ஒளிபரப்பு ஆகிறது.
மம்முட்டி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛தி ப்ரிஸ்ட்'. இதில் மம்முட்டியுடன் மஞ்சு வாரியர், நிகிலா விமல், பேபி மோனிகா, வெங்கடேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜோபின் சாக்கோ இயக்கி இருந்தார், அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார், ராகுல் ராஜ் இசை அமைத்திருந்தார்.
இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி படம். 11 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூலித்தது. ஒரு பணக்கார குடும்பத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தற்கொலை நடக்கிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த மோனிகா என்ற சிறுமியிடம் சில வித்தியாசமான நடவடிக்கைகள் தெரிகிறது. அந்த குடும்பத்திற்கு நெருக்கமான சர்ச் பாதரான மம்முட்டி இந்த மர்மத்தை கண்டுபிடிக்க களம் இறங்கும்போது நடக்கும் ஆச்சர்யமான, திடுக்கிட வைக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
இந்த படம் வருகிற 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.