அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார் சுஜிதா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து சினிமா, சின்னத்திரை என நடிப்பில் பல வருடம் அனுபவம் கொண்டவர் சுஜிதா. அதுமட்டுமில்லாமல் தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்து தனது முழுத்திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸிலும் அவரது நடிப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேசமயம் சுஜிதா தென்னிந்திய மொழிகளில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் தெலுங்கு வெர்ஷினிலும் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுஜிதா தற்போது, தெலுங்கானா மாநிலத்தின் கவர்னர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தராஜன் அவர்களிடமிருந்து விருதினை பெற்றுள்ளார். “மாண்புமிகு மகளிருக்காக” என்ற விருது நிகழ்ச்சியில் சிறந்த ரோல் மாடல் நடிகை என்ற பிரிவில் சுஜிதாவிற்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து விருதினை பெற்ற சுஜிதாவிற்கு தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.