மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கூவாகம் திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடந்து முடிந்தது. கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் கடைசி மூன்று நாட்கள் திருநங்கையர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவர். இதுதான் இந்த விழாவின் ஹைலைட். அந்த வகையில் சமீப காலங்களில் திருவிழாவின் ஒருபகுதியாக திருநங்கையர்களில் சிறந்த அழகிகளை தேர்ந்தெடுக்கும் 'மிஸ் கூவாகம்' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 'மிஸ் கூவாகம்' நிகழ்ச்சியில் சின்னத்திரையில் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் ஜூலி, அபிராமி, சின்னத்திரை நடிகைகளான கேப்ரில்லா செல்லஸ் மற்றும் வந்தனா போன்ற நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பட்டத்தை சூட்டி மகிழ்வித்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களை ஜூலி பகிர்ந்துள்ளார்.