2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
தொலைக்காட்சி பிரபலங்களில் மிகவும் தைரியமான பெண்ணாக வீஜே பார்வதி அறியப்படுகிறார். யூ-டியூப்களில் அடல்ட் கண்டண்ட் பேசியே டிரெண்டிங்க் ஆனவர் என்பதால், சோஷியல் மீடியாவில் இவர் வெளியிடும் பதிவுகளுக்கு அடிக்கடி மிகவும் ஆபாசமான கமெண்டுகளே வரும். ஆனால், அதையெல்லாம் மிகவும் தைரியமாகவும் கூலாகவும் கையாண்டு வருகிறார். ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தொலைக்காட்சி நடிகையாகவும் அறிமுகமான பார்வதிக்கு தற்போது மெல்ல மெல்ல சினிமா வாய்ப்புகள் தேடி வருகிறது. இந்நிலையில், அவர் மேஹாலயா, சிரபுஞ்சி என ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.
அங்கு தனது குழுவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், “நான் எப்போதுமே ஒரு பயணி. பயணம் வாழ்வின் மிகச்சிறந்த தருணங்களை உருவாக்குவதற்கான ஒரு வழி. பயணம் செய்யுங்கள். காசு போனால் மீண்டும் கிடைக்கும், நேரம் திரும்ப கிடைக்காது. நான் எனது இருபதுகளை அதிகமாக பயணம் செய்வதிலும், புதிய மனிதர்களை சந்திப்பதிலும் செலவிட ஆசைப்படுகிறேன்' என கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகிறது.