இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நான்-பிக்சன் நடிகராக அறிமுகமானவர் புகழ். தற்போது வெள்ளித்திரையை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்கிறார். சினிமாவில் அறிமுகமான சில நாட்களிலேயே கிட்டத்தட்ட 5 படங்களில் காமெடியனாக நடித்து முடித்துள்ள புகழ், தற்போது புதிய படமொன்றில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். மிஸ்டர் ஸூ கீப்பர் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
இதற்கிடையில் கிரிக்கெட் வீரரான நட்ராஜன், புகழின் தீவிர ரசிகர் ஆவார். அவர் புகழை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, புகழும், நடராஜன் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டுள்ளார். அண்மையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது நடராஜன் வீட்டிற்கு சென்றது முதல் இருவருக்குமிடையே நடந்த உரையாடல்கள் வரை ஒரு சிறு வீடியோவாக எடிட் செய்து புகழ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதில் புகழ், 'ரொம்ப நாளாவே நம்ம நடராஜ் என்ன பாக்கணும் அண்ணான்னு கூப்டுட்டு இருக்கார். அவர் வீட்டுக்கு போயிட்டு இருக்கோம்' என்று சொல்கிறார். அதன் பின் பேசும் நடராஜ், 'எங்க வீட்டுல அப்பா தங்கராசு, அம்மா சாந்தா மூன்று தங்கைகள், அப்புறம் ஒரு தம்பி. நான் சாதிக்கிறதுக்கு முன்னாடி எனக்கு நிறைய தடைகள் வந்துச்சு. எங்க ஊர்ல இருந்து போறதுக்கு பஸ் கிடையாது. நல்ல துணி கிடையாது. எங்க வீட்ல பாத்ரூம் கூட கிடையாது. எனவே நான் பட்ட கஷ்டத்தை மற்ற இளைஞர்கள் படக்கூடாது' என கூறுகிறார். உள்ளூரில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்ய அவரது சொந்த முயற்சியில் கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றை ரெடி செய்து வருகிறார் எனவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலானதையடுத்து புகழ் மற்றும் நடராஜனுக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.