டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை |

விஜய் டிவியின் ஹிட் தொடரில் ஒன்றான ராஜா ராணி 2வில், ஹீரோயினாக நடித்து வருகிறார் ஆல்யா மானசா. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் பிரசவத்திற்காக சில நாட்கள் தொடரிலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தியா கதாபாத்திரம் என்னவாகும் என்ற கேள்வி ரசிகர்களிடமிருந்து எழுந்துள்ள நிலையில், புதிதாக ஒரு நடிகையை வைத்து டெஸ்ட் ஷூட் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ஆல்யா மானசா எப்போதும் ஒரே சந்தியா தான் அது இந்த ஆல்யா தான் என கூறியிருந்தார். பாரதி கண்ணம்மாவில் வெண்பா ஜெயிலுக்கு சென்றதை போல் காட்டி பரீனா பிரசவத்தை முடித்து மீண்டும் நடிக்க வந்தார். எனவே, அதுபோலவே, ராஜா ராணி 2விலும் சந்தியா கேரக்டருக்கு டுவிட்ஸ்ட் வைப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்தியா கதாபாத்திரத்திற்கு அதுபோல எதுவும் செய்ய முடியாது என்பதால் ஆல்யா மீண்டும் நடிக்க வரும் வரை புது நடிகையை சில காலங்கள் சந்தியா கேரக்டரில் நடிக்க வைக்க சீரியல் குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் தான் இப்போது வைரலாகிறது. ஆனால், இந்த புது நடிகை யார் என்பதை சஷ்பென்ஸாக வைத்துள்ளனர்.