பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'இதயத்தை திருடாதே' சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன். இவர் அண்மையில் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என பதிவிட்டிருந்தார். இதற்கு அர்த்தம் புரியாமல் பலரும் குழம்பி போயினர். நவீன் சீரியலை விட்டு விலகுகிறாரா எனவும் பேசி வந்தனர்.
இந்நிலையில், அவர் அப்படி சொல்லியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நவீன் தனது அம்மாவுடன் செய்திவாசிப்பாளர் கண்மணி சேகரின் போட்டோவையும் பதிவிட்டு காதல் எமோஜியை பதிவிட்டுள்ளார். இதை கண்மணி சேகரும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு பின்னணியில் கனா காண்கிறேன் பாடலை பதிவிட்டுள்ளார். இது ஒரு திருமண பாடலாகும். இதை வைத்து பார்க்கும் போது நவீனும், கண்மணியும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
இருவருக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளதால் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. பலரும் ஜோடி பொருத்தம் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். கண்மணி சேகரின் ரசிகர்களோ ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு வருகின்றனர். எது எப்படியோ? அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி.




