ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய 'புதுப்புது அர்த்தங்கள்' சீரியல் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கிவிட்டது. அம்மாவின் பாசம், மனைவியின் காதல், தோழியின் துரோகம் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர், தற்போது ஜீ தமிழ் சேனலுக்குள் டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த தொடர் வெற்றிகரமாக 300 வது எபிசோடையும் எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தேவயாணி, வீஜே பார்வதி மற்றும் நியாஸ் கான் ஆகியோர் வலிமை படத்தின் 'வேற மாதிரி' பாடலுக்கு அசத்தலான ஆட்டம் ஒன்றை போட்டுள்ளனர்.
புதுப்புது அர்த்தங்கள் தொடரில் தேவயாணி, வீஜே பார்வதி, அபிஷேக் சங்கர் மற்றும் நியாஸ் கான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.