நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளரான அனிதாவுக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வந்தனர். செய்தியே கேட்காத பலரும் இவரை சைட் அடிப்பதற்காக குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை பார்க்க ஆரம்பித்தனர். அனிதாவின் புகழ் அதிகரிக்க சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையினை நிறைவேற்ற முயற்சி செய்து வந்தார். ஆனால், அனிதாவுக்கோ சினிமாவிலும் செய்தி வாசிக்கும் கதாபாத்திரமே கிடைத்தது.
இந்நிலையில் தான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அனிதா பரவலாக பிரபலமானலும், அவரது பெயரும் டேமேஜ் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிக்கும் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர், முந்தைய சீசனின் போது பாலாஜி மற்றும் அனிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதன்பிறகு பாலாஜி ரவீந்தருடன் சமரசமாகி அவருடைய தயாரிப்பில் படமும் நடிக்கவுள்ளார். ஆனால், அனிதா - ரவீந்தர் பிரச்னை ஓயவில்லை.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனிதாவை ரவீந்தர் மீண்டும் விமர்சித்துள்ளார். அதில் அவர், 'உன்னுடைய தந்திரம் இனி பலிக்காது. உன் பருப்பு இந்த தடவ வேகாது குழந்தை. பாலாஜி தம்பி செம க்ளாரிட்டி விளையாடிட்டு இருக்காரு. நீ திருந்தவே மாட்ட சகுந்தலா தேவி' என விமர்சித்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் ரவீந்தர் - அனிதா போர் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என சொல்லி வருகின்றனர்.