டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் டிவியில் குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாக 'சூப்பர் சிங்கர் ஜீனியர்' என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான எபிசோடில் பாடிய கிரஷாங் என்ற சிறுவன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தில் 'தலைகோதும் இளங்காத்து' என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. சான் ரோல்டன் இசையில் பிரவீன் குமார் பாடிய இந்த பாடலை சிறுவன் கிரஷாங் மிகவும் நேர்த்தியாக அனைவரையும் நெகிழச் செய்யும் வகையில் பாடி முடித்தார். கிரஷாங் பாடுவதை கேட்டுவிட்டு நடுவர்கள் சித்ரா, சங்கர் மகாதேவன், கல்பனா உள்ளிட்டோர் வெகுவாக பாரட்டினர்.
கிரஷாங் பாடிக்கொண்டிருக்கும் போதே அனைவரும் எமோஷனலாகி விட்டனர். அதிலும் எஸ்பி சரண் கிரஷாங்கை பாராட்டியதோடு, 'நீ இப்படியே சென்றால், 70, 80 வருஷம் பாடலாம். நீ தான் குட்டி எஸ்பிபி. நீ கடவுளின் குழந்தை' என வாழ்த்தி கண்கலங்கினார். தற்போது சிறுவன் கிரஷாங் பாடிய 'தலைகோதும் இளங்காத்து' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவன் கிரஷாங்கிற்கு தற்போது பலரும் ரசிகர்களாக மாறி வருகிறார்கள்.




