இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
போட்டோஷூட்டில் புதிய புரட்சியே செய்தவர் என்றால் அது நம்ம ரம்யா பாண்டியன். இவரது புகைப்படங்கள் வைரலானதை அடுத்து பலரும் இவரை போலவே கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு க்ளாமர் குயின்களாக சுற்றி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரம்யா பாண்டியனோ சகட்டு மேனிக்கு போட்டோஷூட் எடுப்பதை நிறுத்தி விட்டு கேரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதேற்கேற்றார் போல் வருடத்தில் ஒரு படம் என்றாலும் சும்மா நச்சுன்னு இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம்.
தற்போது அவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மாடர்ன் உடையில் தெறிக்க விடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்களை பார்க்கும் பலரும் பில்லா நயன்தாராவுடன் கம்பேர் செய்து ரம்யாவை பாராட்டி வருகின்றனர்.