ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதில் தொடங்கி இன்று சினிமாவில் நடிகையாக அவதாரம் எடுத்துள்ளது வரை அனிதா சம்பத்தின் கடின உழைப்பு அசாத்தியமானது. பிக்பாஸ் நிகழ்ச்சி, அதன்பின் நடன நிகழ்ச்சி என சின்னத்திரை வட்டாரத்திலும் அனிதா பிரபலம். அனிதாவும், அவரது கணவரும் சமூகவலைதளம் வாயிலாகவே ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடுவதுடன், தங்கள் வாழ்வில் நடக்கும் மகிழ்வான தருணங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அனிதா தனது கணவருடன் சேர்ந்து சமீபத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை சரியாக பார்க்காத ரசிகர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அது ஜாலியாக கிரியேட் செய்யப்பட்ட வீடியோ. அந்த வீடியோவில் அனிதாவிற்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் என்று வருவதை பார்த்து இரண்டு பேருமே ஷாக்காகி விடுவார்கள். வைரலாகும் இந்த வீடியோவை பார்க்கும் சிலர் அனிதா கர்ப்பமாக இருப்பதற்கு வாழ்த்துகளை சொல்ல, 'அய்யோ.. நான் கர்ப்பமாக இல்லை' என அனிதா தற்போது அவர்களுக்கு பதில் சொல்லி வருகிறார்.