இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இரண்டு நட்சத்திரங்கள் தற்போது ஒரே படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பிரபல மாடலான அஸ்வின் ஆரம்பகாலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் சீரியலிலும் நடித்து வந்தார். அவருக்கு சரிவர வாய்ப்பு கிடைக்காத நிலையில் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சூப்பர் ஹிட்டான அந்த நிகழ்ச்சி அஸ்வினுக்கு நல்ல ஒரு மார்க்கெட்டை உருவாக்கியது. அது போலவே அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்களில் புகழ் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அதில் வந்த பிரபலங்கள் பலருக்கும் சினிமா வாய்ப்பு கதவை தட்டி வருகிறது. அஸ்வினும் ஹீரோவாக கமிட்டாகி பிஸியாகிவிட்டார். மற்றொரு புறம் புகழ் பெரிய ஹீரோ படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில் ஹீரோ அஸ்வினும், காமெடியன் புகழும் இணைந்து 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் நடித்து வருகின்றனர். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குக் வித் கோமாளி பிரபலங்கள் இருவர் ஒரே படத்தில் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.