20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | 'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் |
'பாகுபலி' படத்தின் மூலம் பான்-இந்தியா நடிகராக உயர்ந்துள்ளவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது 'சலார், ஆதிபுருஷ்' என்ற இரண்டு பிரம்மாண்டமான பான்-இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.
அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள 25வது படத்தின் அறிவிப்பு அக்டோபர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கடந்த சில வருடங்களாகவே அவர் கதை எழுதி வருகிறாராம். அடுத்தடுத்து சில படங்களை பிரபாஸ் நடிக்க ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தை ஆரம்பிப்பது தள்ளிப் போனது என்கிறார்கள்.
'அர்ஜுன் ரெட்டி' படத்தை ஹிந்தியில் 'கபீர் சிங்' என் ரீமேக் செய்து அங்கும் பெரிய வெற்றி பெற்றவர் சந்தீப். தற்போது 'அனிமல்' என்ற ரன்பீர் கபூர் நடிக்கும் ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸின் 25வது படத்தில் சந்தீப் இணைந்தால் அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.