லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக பட்ஜெட், அதிக போட்டியாளர்கள், நட்சத்திரத் தொகுப்பாளர் என கடந்த நான்கு வருடங்களாக பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. 5வது சீசன் நேற்று முதல் ஆரம்பமானது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் டிவி நேயர்களுக்கு அதிகம் தெரியாத போட்டியாளர்கள்தான் அதிகம். இமான் அண்ணாச்சி, பிரியங்கா ஆகிய இருவரைத்தான் பலருக்கும் தெரியும். சின்னப்பொண்ணு, அபினய், ராஜு ஆகியோரை கொஞ்சம் பேருக்கு தெரியும். மற்ற போட்டியாளர்களை ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இசைவாணி, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா, பவனி, நடியா சங், வருண், ஸ்ருதி, அக்ஷரா, ஐக்கி பெர்ரி, தாமரை செல்வி, சிபி, நிரூப் ஆகியோரை ஒரு சிலருக்குத்தான் தெரிந்திருக்கும். பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு இவர்கள் யார் என்பது அதிகம் தெரியாமல் இருந்தாலும், அங்கு சர்ச்சை, சண்டை ஆகியவற்றில் சிக்குபவர்களுக்கு அதிகமான பிரபலம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இன்று தான் முதல் நாள் நிகழ்ச்சி என்பதால் போட்டியாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் ஆகும். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் நாடகம் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறும். அப்படி இந்த சீசனில் யார் காதலில் விழப் போகிறார்களோ ?
போட்டியாளர்களுக்குள் சில பல மோதல், அரசியல் நிகழ்ந்து, ஒரு சில அணிகள் உருவாகும். அவர்களுக்குள் காரசாரமான விவாதங்கள் நடக்கும். முதல் நாளிலேயே இந்த நிகழ்ச்சியைப் பிரபலமாக்குவதற்கென்றே சமூக வலைத்தளங்களில் சிலர் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
வழக்கம் போல ஒரு 'டெம்ப்ளேட்டுக்குள்' அடங்கும் விதத்தில்தான் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். விஜய் டிவி தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர்கள், நடிகைகள், மாடலிங், வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், பாடகர்கள் என இந்த சீசனிலும் எந்த மாற்றமும் இல்லை.
வீட்டில் மட்டுமே சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான லோகோவை மாற்றியுள்ளார்கள். ஐந்தாவது சீசனாக அதே தொகுப்பாளர் கமல்ஹாசன். அவரும் வழக்கம் போலவே எந்த மாற்றமும் இல்லாமல் தனது தொகுப்பு வேலையை ஆரம்பித்துள்ளார்.
முந்தைய நான்கு சீசன்களைப் போல 'மோனோபாலி'யாக இருந்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள். இந்த 5வது சீசன் முந்தைய சீசன்களிலிருந்து மாறுபட்டிருந்தால் மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும். அது நடக்குமா, முந்தைய சீசன்களைப் போல பரபரப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.