இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றன. இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டீசர் என உற்சாகத்தில் உறைய வைத்தனர் படக்குழுவினர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன் தினம் அறிவித்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்பதையும் அவர் தெரிவித்தார். கிரிக்கெட் வீரர் மொயின் அலி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், மொயின் அலி தனது டெஸ்ட் கெரியரில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் திடீரென என்னை அழைத்து 'வலிமை' அப்டேட் என கேட்டார். அதை என்னால் மறக்க முடியாது என்று மொயின் அலி கூறியுள்ளார். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஸ்வின், 'அப்பவே சொன்னேன்' என்று சிரிக்கும் எமோஜிகளுடன் பதிவிட்டுள்ளார்.