பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் |

விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார், தில் ராஜ் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. இந்த அறிவிப்புக்கு பிறகு இயக்குனர் வம்சியும், தயாரிப்பாளர் தில் ராஜும் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். தரிசனம் முடிந்து வெளியி்ல் வந்ததும் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
மகரிஷி படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது பெருமாளுக்கு நன்றி சொல்லும் விதமாக இங்கு வந்து தரிசனம் செய்ய நினைத்தோம். ஆனால், அப்போது கொரோனா தொற்று அதிகமாகப் பரவிக் கொண்டிருந்ததால் வரமுடியவில்லை. இப்போது விஜய் நடிக்கும் திரைப்படத்தை அறிவித்துள்ளோம். எனவே, இதுவே தரிசனம் செய்ய சரியான நேரம் என்று நானும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் நினைத்தோம். அதற்காகவே வந்தோம்.
கடவுளின் ஆசியில்லாமல் எதுவும் நடக்காது என்று நம்புபவர்கள் நாங்கள். விஜய்யை நான் இயக்குவதும் இறைவனின் நாட்டம் என்றே நம்புகிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இருக்கும். அதை மட்டுமே இப்போதைக்கு என்னால் கூற முடியும். விஜய் ஒவ்வொரு படத்திலும் புதிதாகத் தெரிவார். எனது படத்தில் இன்னும் புதிதாக தெரிவார். எனக்கு அவருடன் இது புது அனுபவம். விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது இறைவனின் அருளே. இறைவனின் நாட்டமே. இன்னும் சில நாட்களில் மற்ற விபரங்களை அறிவி்ப்போம். என்றார்.