‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
ஆன்மிக படங்களை, அதி நவீன தொழில்நுட்பத்தில் கமர்ஷியலாக எடுப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அப்படி வெளியான 'மகாஅவதார் நரசிம்மா' 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. 'ராமாயணம்' பல நுாறுகோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த வாரம் ராமர் சம்பந்தப்பட்ட 'மிராய்' ரிலீஸ் ஆகிறது. அடுத்து 'வாயுபுத்ரா' என்ற 3டி அனிமேஷன் படம் வெளியாக உள்ளது.
''ஹனுமான் புகழ் பாடும் இந்த படத்தை சந்து மொண்டேட்டி இயக்க உள்ளார். நமது வரலாற்றிலும் இதிகாசங்களிலும் நிறைந்த வாயுபுத்ராவின் காலத்தை மீறும் அபிநவ புராண வீரனின் காவியக் கதையைப் பேசுகிறது. வலிமையிலும் பக்தியிலும் அசைக்க முடியாத அந்த நிரந்தர போர்வீரனின் வரலாறு இப்போது திரைக்கு வருகிறது. அதோடு, மலைகளையே நகர்த்திய பக்தியின் கதையும், தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக அமைந்த ஹனுமான் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், தியாகமும் இந்த காவியத்தில் வெளிவரவுள்ளது. மாபெரும் 3டி அனிமேஷன் சினிமா அனுபவமாக, வாயுபுத்ரா இந்து மதத்தின் நித்திய காவியமாக உருவாகும் ஹனுமான் கதையை, 2026 விஜயதசமி பண்டிகை
அன்று பார்க்கலாம். தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படம் ரிலீஸ்'' என்று படக்குழு அறிவித்துள்ளது.