ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடையும் எனத் தெரிகிறது. இப்படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில்தான் சூர்யா நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதில் சில மாற்றங்கள் நடக்கும் எனத் தெரிகிறது.
சூரி, விஜய் சேதுபதி நடிக்க வெற்றிமாறன் இயக்கி வரும் 'விடுதலை' படத்தின் மொத்த வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் 'வாடிவாசல்' பக்கம் வர உள்ளாராம் வெற்றிமாறன். அதற்குள்ள சிவா இயக்கத்தில் எப்போதோ அறிவிக்கப்பட்ட படத்தை மீண்டும் துவங்கும் முடிவில் உள்ளாராம் சூர்யா.
ரஜினிகாந்த் நடிக்க சிவா இயக்கி வரும் 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இந்த மாதத்திற்குள் முடிவடைய உள்ளது. நவம்பர் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது. இதற்கடுத்த படமாக சூர்யா படத்தை சிவா இயக்குவார் என்கிறார்கள்.
ரஜினிகாந்த்திற்காக இரண்டு முறை தனது படங்களை தள்ளி வைத்துள்ளார் சூர்யா. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்த போது அவர் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்தை இயக்கப் போய்விட்டார். சிவா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்த போது அவர் 'அண்ணாத்த' படத்தை இயக்கப் போய்விட்டார்.