நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தமிழ் சினிமாவில் விஜய்யுடன் மட்டுமே மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. தற்போது ஷாரூக்கான், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கான அனுமதி ஒன்றைப் பெறும் கடிதம் நேற்று சமூக வலைத்தளங்களில் சுற்றி வந்தது. அதில் படத்தின் பெயர் 'லயன்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுதான் படத்தின் பெயரா அல்லது படப்பிடிப்புக்காக வைத்துள்ள பெயரா என்பது போகப் போகத்தான் தெரியும்.
தமிழில் தான் இயக்கிய படங்களின் கதையை, எப்போதோ வெளிவந்த படங்களிலிருந்து காப்பியடித்தவர் அட்லீ என்ற குற்றச்சாட்டு உண்டு. இப்போது ஹிந்திப் படத்தையும் தமிழில் வெளிவந்த 'பேரரசு' என்ற படத்திலிருந்துதான் உல்டா செய்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் பெயருக்குக் கூட அவர் அதிகம் யோசிக்கவில்லை. தமிழில் வெளிவந்த 'சிங்கம்' படத்தின் பெயரையே ஆங்கிலத்தில் மாற்றி 'லயன்' என வைத்துவிட்டார் போலும். 'சிங்கம்' என்ற பெயரில் ஹிந்தியில் ஏற்கெனவே படம் வெளிவந்துவிட்டது, அதனால்தான் ஆங்கிலப் பெயர்.
கதை காப்பியோ, தலைப்பு காப்பியோ படம் ஹிட்டாகிறதா அதைத்தான் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் பார்க்கிறார்கள்.