பொங்கல் போட்டி : தியேட்டர்கள் கிடைக்கத் தடுமாறும் தெலுங்குப் படங்கள் | 'ஜனநாயகன்' டிரைலரை பின்னுக்குத் தள்ளிய 'பராசக்தி' டிரைலர், எழுந்த சர்ச்சை | 'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் |

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் நேற்றைய தினம் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகி இருப்பதை அடுத்து ஹாலிவுட் படங்களான சாங் சி மற்றும் எப்-9 ஆகிய படங்களும் இந்தியா முழுக்க திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. அதோடு இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்த செய்தி கங்கனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வழியான பெல்பாட்டம் திரைப்படம் 4 நாட்களில் 2.75 கோடிகளை வசூலித்தபோது, ஹாலிவுட் படமான சாங் சி முதல் மூன்று தினங்களில் 12.63 கோடிகளை வசூலித்தது. இப்படி அக்ஷய்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கே இந்த நிலை என்றால் தனது தலைவி படத்தின் வசூல் இந்த ஹாலிவுட் படங்களை பாதிக்கப்படுமோ என்ற அதிர்ச்சி காரணமாகவே ஹாலிவுட் படங்களால் இந்திய படங்களின் வசூல் பாதிக்கிறது. அதனால் ஹாலிவுட் படங்களின் இந்திய ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்று ஒரு அதிரடி கருத்து வெளியிட்டுள்ளார் கங்கனா.