‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தனது புதிய படத்தை தொடங்கி விட்டார் ஷங்கர். இதற்கு முன்பு தமிழ், ஹிந்தியில் படம் இயக்கியுள்ள ஷங்கருக்கு இது முதல் தெலுங்கு படமாகும். ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாராஅத்வானி நடிக்கயிருக்கும் இந்த படத்தில் அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட சில நடிகர்களும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
இந்தநிலையில் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து வரும் சுனில் ஷங்கர் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். தெலுங்கு சினிமாவில் ஹீரோ, காமெடியன் என 40 படங்களில் நடித்துள்ள சுனில் சமீபகாலமாக வில்லனாக நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் ஷங்கர் - ராம்சரண் படத்திலும் சுனில் வில்லனாக நடிக்கிறாரா? இல்லை வேறு முக்கிய வேடங்களில் நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை.