ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் சினிமாவில் இருந்து மனீஷா கொய்ராலா, தீபிகா படுகோனே, வித்யாபாலன் என பல நடிகைகள் தமிழுக்கு வந்து நடித்துள்ள நிலையில், தற்போது காலாவைத் தொடர்ந்து வலிமையில் நடித்துள்ளார் ஹூமாகுரோசி. அவரைத் தொடர்ந்து தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை வெளியாக உள்ள இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். சென்னை, ஐதராபாத், மும்பை என இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் கங்கனாரணாவத்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்திருப்பது தனக்கு கிடைத்த பெருமை என்று கூறியுள்ள கங்கனா, தமிழில் இப்படம் நல்லதொரு என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதோடு, அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் மெகா ஹீரோக்களான ரஜினி, விஜய் ஆகியோருடனும் இணைந்து நடிக்க தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.