ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் |
விஜயகாந்த் உடல்நலப் பிரச்னையின் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் அவருடைய பிறந்தநாளன்று வெளியிட்ட அறிக்கையில் சிகிச்சை பெறுவதற்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி மகன் சண்முக பாண்டியனுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்றார்.
தொண்டையில் தொற்று, நடைபயிற்சி உள்ளிட்டவற்றுக்காக துபாயிலேயே தங்கி சிகிச்சையை எடுத்து வரும் விஜயகாந்த், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில், ‛நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம், என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கால் மேல் கால் போட்டுக்கொண்டு விஜயகாந்த் அமர்ந்துகொண்டு செல்போனில் திரைப்படம் பார்க்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.