கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” |

அட்டக்கத்தி படத்தில் இயக்குனரான பா.ரஞ்சித் அதையடுத்து மெட்ராஸ் படத்தை இயக்கியவர் பின்னர் ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை அடுத்தடுத்து இயக்கினார். இதில் கபாலி வெற்றி பெற்றது. அதையடுத்து குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரையை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரஞ்சித்.
இந்தநிலையில் அடுத்தபடிளாக அட்டகத்தி பாணியில் நட்சத்திரம் நகர்கிறது என்றொரு காதல் படத்தை தற்போது இயக்குகிறார். இந்தபடத்தில் காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷாரா விஜயன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை அடுத்து விக்ரமை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் பா.ரஞ்சித். ஒரு மாறுபட்ட ஆக்சன் கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறதாம்.