ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்த காலம் போய் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரையில் பெரிய இடங்களை பிடித்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் பிக்பாஸ் ஷிவானி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ள தகவல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் மேலும் இரண்டு தொலைக்காட்சி நடிகைகள் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தபடத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், விஜய் சேதுபதிக்கு இந்த படத்தின் கதைப்படி மூன்று மனைவிகள் உள்ளனராம். அதற்கு நாயகிகளை தேடி வந்த படக்குழுவினர் சின்னத்திரை நடிகைகளை மொத்தமாக களமிறக்கியுள்ளனர்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கவுள்ள தகவல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மைனா நந்தினியும் விஜய் சேதுபதியின் மற்றொரு ஜோடியாக நடிக்கவுள்ளார். இதை மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராமில் இயக்குனர் லோகேஷுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாவது ஜோடியாக விஜே மகேஸ்வரி நடிக்கிறார்.