நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு | ஆயிரம் கோடி வசூல் கனவு…. காத்திருக்கும் தமிழ் சினிமா…. | என்டிஆர் - நீல் படப்பிடிப்பு ஆரம்பம்: 'சலார், கேஜிஎப் 3' நடக்குமா? | 'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி |
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் என பலரது நடிப்பில் ராஜமவுலி இயக்கியுள்ள பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடக்கின்றன. இப்படத்தை வருகிற அக்டோபர் 13-ந்தேதி வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் ராஜமவுலி. ஆனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றபோது அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்த ஆண்டு எப்போது ரிலீஸ் என்பதை இன்னும் ராஜமவுலி உறுதிப்படுத்தவில்லை.
இந்தநிலையில் இப்படி ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதியை ராஜமவுலி உறுதிப்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, சமீபத்தில் ஹிந்தியில் அக்சய்குமார் நடிப்பில் வெளியான பெல்பாட்டம் படம் வெறும் ரூ.25 கோடி தான் வசூலித்துள்ளது. அதனால் இந்த நேரத்தில் ஆர்ஆர்ஆர் படத்தை வாங்க முன்வரும் வட இந்திய விநியோகஸ்தர்கள் குறைவான தொகைக்கே படத்தை கேட்பார்கள் என்பதால், அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெறும் போது படத்தை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கலாம் என்று தான் தாமதம் செய்து வருகிறாராம் ராஜமவுலி.