ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். மேலும், இவர் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவரது போட்டோ ஷூட்டுக்கு என்றே சமூக வலைதளத்தில் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும்போது ஒருவர் உள்ளாடை குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதில், இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் எந்த வகையான உள்ளாடையை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு முகம் சுழிக்காமல், ‛‛நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் பிரா பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன். ஆனால், உண்மையை சொன்னால் அது பார்க்க மோசமாக இருக்கும். நான் பெரும்பாலும் ஆன்லைனில் தான் வாங்குவேன்'' என்று பதில் அளித்துள்ளார்.