விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

பட்டியல் இன மக்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து வீடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கேரளாவில் கைது செய்த போலீசார் அதையடுத்து சென்னை கொண்டு வந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அவரிடத்தில் விசாரணை நடத்திய நீதிபதி அவரை வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதன்பிறகு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மீராமிதுன். மேலும் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்துவரும் போலீசாரிடம் அவர் அடிக்கடி மாற்றி மாற்றி பேசி வருவதால் மன நல மருத்துவரை கொண்டு விசாரணை தொடங்க திட்டமிட்டு உள்ளார்கள்.
இந்நிலையில் போதை மருந்து உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்து வந்த மீரா மிதுனின் தோழி ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு தற்போது நடிகை மீரா மிதுன் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்த அவரது யூடியூப் சேனலை முடக்கவும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.