பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமாவில் 2009ம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படம் வெளியீட்டின் போது வியாபார ரீதியாகப் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும, விமர்சன ரீதியாக பெரிதும் பேசப்பட்டது.
செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்த அந்தப் படம் ஒரு 'அட்வென்ச்சர்' படமாக அமைந்தது. படம் வெளியாகி இத்தனை வருடங்களாகியும் அந்தப் படத்தை இப்போதும் சிலாகித்துப் பேசி வருகிறார்கள் ரசிகர்கள்.
அதைப் புரிந்து கொண்டு தான் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய அறிவிப்பையும் இந்த வருடப் புத்தாண்டில் அறிவித்தார் செல்வராகவன். தனுஷ் நடிக்க 2024ம் ஆண்டு அந்தப் படம் வரும் என தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இன்று திடீரென 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் முதல் பாகத்தைப் பற்றி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார் செல்வராகவன். அதில், “ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி தான். ஆனால், அதை ஒரு மெகா பட்ஜெட் படம் என உயர்த்திக் காட்டுவதற்காக 32 கோடி பட்ஜெட் என அறிவிக்க முடிவு செய்தோம். என்ன ஒரு முட்டாள்தனம். படத்தின் உண்மையான பட்ஜெட்டை படம் வசூல் செய்திருந்தாலும், அது ஆவரேஜ் வசூல் என்று தான் சொல்லப்பட்டது. என்ன முரண்பாடு இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்,” என 12 வருட வரலாற்றைக் கிளறிவிட்டுள்ளார்.
செல்வராகவன் பதிவின்படி பார்த்தால் சினிமாவில் பலரும் பொய்யான பட்ஜெட்டை சொல்லுவார்கள் என்ற உண்மை வெளிப்படுகிறது. அந்தப் பொய்க்கு அப்போது செல்வராகவனும் உடந்தையாகத்தான் இருந்துள்ளார். இப்போது, பொய் சொல்லக் கற்றுக் கொண்டேன் என்று சொல்வதற்கான அவசியம் என்னவென்று தெரியவில்லை.
இனி, ஒரு படத்தின் பட்ஜெட் 500 கோடி என்று யாராவது அளந்துவிட்டால், அதன் உண்மையான பட்ஜெட் 280 கோடிதான் இருக்கும் என சாதாரண ரசிகர்களும் கணக்கு போட்டுக் கொள்வார்கள்.