பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
2010 தெலுங்கு சினிமாவில் என்ட்ரியானவர் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். அதன்பிறகு 2012ல் தமிழில் விமல் நடித்த இஷ்டம் என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் தோல்வியடைந்து விடவே அதையடுத்து நிஷா அகர்வாலுக்கு தமிழில் படங்கள் இல்லை. பின்னர் தெலுங்கு, மலையாளத்தில் சில படங்களில் நடித்த நிஷா அகர்வாலுக்கு அங்கும் தொடர்ந்து பட வாய்ப்புகளே இல்லை. அதனால் 2014ல் மலையாளத்தில் நடித்த கசின்ஸ் என்ற படத்திற்கு பிறகு உடனடியாக திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். தற்போது அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.
இந்தநிலையில், 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் நிஷா அகர்வால். தெலுங்கில் வெங்கடேஷ்- ராணா ஆகிய இருவரும் இணைந்து ஒரு வெப்சீரிஸில் நடிக்கப் போகிறார்கள். இதில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க நிஷா அகர்வால் கமிட்டாகியிருக்கிறார். இதன்பிறகு சினிமாவிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ளாராம் நிஷா அகர்வால்.