ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
மைக்கேல் ராயப்பன் தயாரித்த ‛அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்ததில் இருந்தே சிம்புவுடன் அவருக்கு மோதல் வெடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது கவுதம்மேனன் இயக்கும் ‛வெந்து தணிந்தது காடு' படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படம் தொடங்கப்பட்டதில் இருந்தே பெப்ஸிக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்குமிடையே பிரச்னை வெடித்துள்ளது.
இந்தநேரத்தில் சிம்புவின் தாயாரான உஷா ராஜேந்தர், தனது மகன் சிம்புவுக்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இன்னும் ரூ.3.50 கோடி சம்பள பாக்கி தர வேண்டியுள்ளதாக ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து மைக்கேல் ராயப்பன், ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், ரூ.3.50 கோடி சம்பளம் தர வேண்டும் என்று உஷா ராஜேந்தர் சொல்வது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிம்பு எனக்கு இன்னொரு படத்தில் நடித்து தரவேண்டுமென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொன்னேன். அதற்காகத்தான் நான் ரூ.75 லட்சம் தருவதாக கூறியிருந்தேன். ஆனால் இப்போதுவரை சிம்பு அந்த ஒப்பந்ததை என்னிடம் தரவில்லை. மேலும் நான் அவர்களுக்கு கொடுத்த ஒரு செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த நாள் அதே தொகைக்கான டிடி எடுத்து அவர்களுக்கு கொடுத்து விட்டேன். ஆனால் இப்போதுவரை அந்த செக்கை அவர்கள் என்னிடம் திருப்பித்தரவில்லை என்றும் சிம்பு மீதான தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.