இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு 'ஹோ கயா 2004 என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.
இநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் திருமணத்திற்கு திருமணத்திற்கு பின்னர் தன் கணவருடன் அடிக்கடி சுற்றுல்லா சென்று வரும் காஜல் சமீபத்தில் நீச்சல் உடையில் படகில் புட் போர்ட் அடித்தவாறு படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதே போல சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் காஜல் அகர்வால். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சினிமாவை விட்டு விலகப்போகிறார்களா என்று கேள்விக்கு பதில் அளித்த காஜல், ‛‛நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி சொன்னால் நடிப்பதை விட்டு விடுவேன்'' என்று கூறி இருந்தார்.